2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர், கொழும்பு மற்றும் பல பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகள், தேவாலயங்கள் மற்றும் ஏனைய இடங்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்குச் சதி செய்தல் , மற்றும் தாக்குதல்களுக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் பிரதான சூத்திரதாரி நவுஃபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 9 பிரதிவாதிகளும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேல் நீதிமன்ற நீதிபதி (தலைவர்) நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிகளின் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தற்போது.
2009-ல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விடுதிகள் மீது நடாத்தப் பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இக் குண்டுவெடிப்புகள், இலங்கையில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும். இறந்தவர்களில் 45 வெளிநாட்டினரும் அடங்குவர்.
இந்த தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று புலனாய்வாளர்கள் முன்னர் குற்றம் சாட்டியிருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட 25 பேரும் இலங்கையின் முஸ்லிம் சிறுபான்மையினர். அவர்களில் ஒருவர் காவலில் இருந்தபோது உயிரிழந்தார்.
ஈஸ்டர் கொடூரத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நவுஃபர் மௌலவி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு !
Share this article
More News

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது!
September 22, 2026

கிழக்கு மண்ணில் நடாத்தப்பட்ட சவுக்கடிப் படுகொலை
September 22, 2026


அரசியலில் – இருக்கும் இடம் அறிந்தால்தானே, போகுமிடம் அறிய முடியும்
September 22, 2026



நாட்டில் மண்சரிவு அபாயம்
September 20, 2026