சர்மா தோழருக்கு இதய அஞ்சலி

ஈழப் போராட்டத்தின் ஆரம்பக் காலகட்டங்களில் முன்னணி தோழனாக சிறந்து விளங்கியவர்களில் ஒருவரான தோழர் சர்மா அவர்கள் இன்று காற்றில் கலந்து விட்டார்.

எங்கள் தோழர் சர்மா அவர்கள் அக்கரைப்பற்றில் பிறந்து 80களில் முழுமூச்சாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்டு வீரியமாக செயல்பட்ட ஒரு தோழர்.

 

கவிஞர் எழுத்தாளர் என்று பன்முகத் தன்மையுடைய தகமையைக் கொண்ட தோழர்.

 

EPRLF இன் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினராகவும், கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினராகவும் தன்னுடைய இறுதிக் காலம் வரையும் சிறப்பாகச் செயல் பட்டார்.

 

எப்போதும் ஈழப் போராட்டம் பற்றியும் மக்களினுடைய நலன் சார்ந்தும் மண்ணுக்காகவும் சிந்தித்துக் கொண்டிருந்த எங்கள் சர்மா தோழர் அவர்கள் இன்று சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

 

கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்றில் பிறந்து மட்டு நகரில் வாழ்ந்து வந்த தோழர் எம் எல்லோரையும் விட்டு விண்ணுலகம் சென்று விட்டார்.

 

எங்கள் சர்மா தோழருக்கு இதய அஞ்சலி..

 

அவர் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

இப்படிக்கு தோழர்கள் நாங்கள்.

Share this article

More News