இன்று யாழ் ஊடக மையத்தில் அனுர அரசின் இரண்டு வருடங்கள் பூர்த்தியான தையொட்டி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரம்மச்சந்திரன் நடாத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பபில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தார். அதில் வளமான நாடு அழகான வாழ்க்கை என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று எவ்வளவு வளங்களை உருவாக்கி உள்ளார்கள் எவ்வளவு எவ்வளவு அழகான வாழ்க்கையை எமக்கு தந்திருக்கிறார்கள் என்று கேள்விக்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் வடகிழக்கை பொறுத்தவரையில் இஎந்த வளங்களும் உருவாக்கப்படவில்லை எவருடைய வாழ்க்கையும்டைய அழகாக மாற்றப்படவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை .மேலும் இந்த இரண்டு வருடங்களில் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எவற்றையேனும் நிறைவேற்றினார்களா என்று கேள்வி எழுப்பினார். காணிகள் விடுவிக்கப்படும் என்றார்கள் எவ்வளவு காணிகள் விடுவிக்கப்பட்டது என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. பயங்கரவாத சட்டம் இல்லாது ஒழிக்கப்படும் என்றார்கள் ஒழிக்கப்படவில்லை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்கள் விடுவிக்கப்படவில்லை. இனவாதிகள் மதவாதிகளில் இல்லை நாங்கள் என்றார்கள் ஆனால் இந்து கோவில்கள் இருநத இடத்தில் பௌத்த கோயில்கள் கட்டுகிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கிறார்கள். இவை எல்லாமே இனவாத கண்ணோட்டத்தில் தான் மேற்கொள்ளப்படுகின்றது தமிழ் மக்களை பொறுத்த வரையில் வளமான நாடுமில்லை அழகான வாழ்க்கையும் இல்லை என்று கூறினார்.
தமிழ் மக்களை பொறுத்த வரையில் வளமான நாடுமில்லை அழகான வாழ்க்கையும் இல்லைஅனுர அரசின் 2 வருட சாதனை பற்றி சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி
Share this article
More News

கிழக்கு மண்ணில் நடாத்தப்பட்ட சவுக்கடிப் படுகொலை
September 22, 2026


அரசியலில் – இருக்கும் இடம் அறிந்தால்தானே, போகுமிடம் அறிய முடியும்
September 22, 2026



நாட்டில் மண்சரிவு அபாயம்
September 20, 2026

வெடுக்கு நாறிமலை வழிபாடு தொடர்பாக சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றம் உத்தரவு
September 19, 2026

சஹ்ரானைக் கண்டதுமில்லை பேசியதுமில்லை : குற்றச்சாட்டை நிராகரித்த ரிசாட்
September 19, 2026