தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மேல் மக்களுக்கு பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் உண்டு. கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை. மக்களை ஏமாற்றுபவர்களாகவும் சுயநலவாதிகளாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க மாட்டார்கள் போன்ற இன்னோரன்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
யுத்தம் நடந்த காலத்திலும் பல்வேறுபட்ட இயக்கங்கள் இருந்தன. பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில் நடந்த இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்குமான பேச்சுவார்த்தையின்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழ புரட்சி அமைப்பு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய ஆறு தமிழ் கட்சிகள் அதில் அங்கம் வகித்தன. இந்த திம்புப் பேச்சுவார்த்தையின் போதுதான் திம்பு கோட்பாடு பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்ரூபவ் வடக்கு-கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம்,தமிழர்களுக்கு சுய நிர்ணயஉரிமை இருக்கின்றது. மலையகத் தமிழர்களின் குடியுரிமை முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும் போன்ற விடயங்கள் அதில் அடங்கியிருந்தன.
தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய அமைப்புகளும் இவற்றை அடியொற்றியே பேச்சுவார்த்தைகளை நடாத்தி வந்திருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். தமிழீழக் கோரிக்கை என்பது கைவிடப்பட்டு மீண்டும் சமஷ்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வரும் இலங்கை அரசாங்கங்கள் விடாக்கண்டனாகச் செயற்பட்டு ஒற்றையாட்சியிலேயே உறுதியாக உள்ளார்கள். யுத்த காலத்தின் பொழுதும் யுத்தத்திற்குப் பின்னரும் தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் இருக்கிறது என்பதை இந்த அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டாலும் அவற்றை முழுமையாகத் தீர்ப்பதற்கான வல்லமையோ அல்லது விருப்பமோ அவர்களுக்கு இருந்ததில்லை. விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையும் சரி ஏனைய கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளும் சரி காலத்தைக் கடத்தும் ஒரு செயற்பாடாகவே சகல அரசாங்கங்களாலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
அதைப் போலவே தமிழர் தரப்பிலும் ரூடவ்ழத்தைத் தவிர்த்த ஒரு உச்சபட்ச மாற்றுத் தீர்வை ஏற்றுக்கொள்ள பல சந்தர்ப்பம் வந்தபொழுதும்கூட, அவை நிராகரிக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில் அவர்களுக்கு பேரம் பேசக்கூடிய வல்லமையும் ஆற்றலும் இருந்தது. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக ஒரு பலம் வாய்ந்த அமைப்பாகவும் வடக்கு-கிழக்கின் பெரும் பகுதிகளில் ஒரு நடைமுறை அரசை நடாத்தியும் வந்தார்கள். அந்த காலகட்டம் என்பது பேரம் பேசவும் உச்சபட்ச உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான காலமாக இருந்தது. அது தமிழர் தரப்பால் சரியான முறையில் கையாளப்பட்டதா இல்லையா என்பது விவாதத்திற்குரிய ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால் அந்த இராணுவ ஆற்றல் அனைத்தும் அழிக்கப்பட்டு பேரம் பேசக்கூடிய வல்லமையும் இழக்கப்பட்டு பாராளுமன்றத்திற்குள் அங்கம் வகிக்கும் சிறு குழுவாகவே நாங்கள் மாற்றப்பட்டிருக்கிறோம்.
ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத போதுதான் பாராளுமன்ற தமிழ்ப் பிரதிநிதிகளின் தேவை உணரப்படும். ஆனால் யுத்தத்திற்குப் பின்னர் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் அறுதிப் பெரும்பான்மையுடனோ அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனோ ஆட்சி அமைத்துள்ளன. இந்த நிலையில் பாராளுமனறத்திற்குப் போகும் தமிழ்ப் பிரதிநிதிகள் சாதனை புரிந்துவிடுவார்கள் என்றோ உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து விடுவார்கள் என்றோரூபவ் நாங்கள் கேட்டவுடன் அரசாங்கம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடுமென்றோ நாம் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறாயின் ஏன் தமிழர் தரப்புகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கேள்வி எழலாம். பாராளுமன்றத்தைப்பாவிப்பதென்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை. எமது கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கவும் அதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கே உரித்துண்டு என்ற அடிப்படையிலும் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற மிச்ச மீதி இருப்பை பாதுகாத்துக்கொள்ளவும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் எவ்வாறு தமிழ்மக்களை அழித்தொழிக்கிறது என்பதை அவர்களது சபையிலேயே வெளிப்படுத்தவும் சர்வதேச சமூகத்துடனான ஊடாட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துச் செல்லவும் இந்த பாராளுமன்ற ஜனநாயகமும் மக்கள்பிரதிநிதித்துவமும் முக்கியமானவை.
பாராளுமன்ற ஜனநாயக நடைமுறைகளிலிருந்து நாம் விலகியிருப்போமாக இருந்தால் சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்பது தமிழர் பிரதேசங்களில் தன்னை விஸ்தரிப்பதற்கு இடம் கொடுத்ததாகவே அமையும். தமிழ் மக்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டு தொன்மையான வரலாற்றைக் கொண்டவர்கள். தமது இருப்பிற்காகத் தொடர்ந்து போராடியவர்கள்.
அத்தகைய பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது யாரிடம் கையளித்தால் சிறப்பானது என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். பல கட்சிகள் இருக்குமிடத்தில் அவர்களது கொள்கைகளில் கோட்பாடுகளில் தந்திரோபாயங்களில் சில வேறுபாடுகள் இருக்கலாம். அவ்வாறான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டுகளை வீசாமல் எந்தக் கட்சி ஒப்பீட்டு ரீதியில் சிறப்பான கொள்கையைக் கொண்டிருக்கின்றது. அந்தக் கட்சியில் இருப்பவர்கள் யார் பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தமிழ் மக்களுக்காகச் சிறந்த முறையில் பாவிப்பார்கள் என்பதை எமதருமை மக்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஒற்றுமையை விரும்பக்கூடிய மக்கள் ஒற்றுமையாகச் செயற்படுபவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஏனையோரையும் அந்த ஒற்றுமை முன்னணியில் இணைய தூண்டுகோலாக அமைய வேண்டும். அவ்வாறில்லாமல் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்று தொடர்ந்தும் பேசுவதில் அர்த்தமில்லை.
தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய சகல அமைப்புகளும் ஒரு ஜனநாயக வழிமுறையிலான போராட்டத்திற்குத் திரும்பியிருக்கிறார்கள். இவர்களது இயக்கங்களிலிருந்த நூற்றுக்கணக்கானோர் விடுதலைக்காக தமது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். யுத்தத்தில் மடிந்து போகாமல் மீதமாக இருக்கக்கூடியவர்கள் ஜனநாயக வழியிலும் அறவழிப் போராட்டங்களினூடாகவும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்திட முயற்சிக்கின்றார்கள். இவை தவிர ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுக்காத பலர் இன்றைய கட்சியின் தலைவர்களாகவும் புதிய கட்சிகளை உருவாக்குபவர்களாகவும் இருக்கின்றார்கள். ஜனநாயக சூழ்நிலையில் அத்தகைய நடைமுறைகள் சாத்தியமானதுதான். ஆனாலும் மக்கள் இவற்றை புடம்போட்டு ஆராய வேண்டும். அவ்வாறு செய்வதனூடாகத்தான் சரியான நபர்களையும் சரியான தலைமைகளையும் இனங்காண முடியும்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் மேல் கொண்ட அவநம்பிக்கையாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ ஆளும் தரம்பைச் சேர்ந்த நபர்களையும் சுயேட்சையாகப் போட்டியிட்டவர்களையும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருந்தனர். ஆனால் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழ் மக்களின் மானம்ரூபவ் மரியாதை சகலவற்றையும் போட்டி
போட்டுக்கொண்டு விற்பவர்களாகவும் ஆளும் கட்சியின் அனைத்து அடாவடி நடவடிக்கைகளையும் ஆதரிப்பவர்களாகவும்இருக்கின்றார்கள்.
அவ்வாறானவர்களைத் தெரிவு செய்வது எவ்வளவுதூரம் ஆபத்தானது என்பதை இவர்களின் கடந்த ஒருவருட செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவைக் கொடுத்திருக்கும் என்று நம்புகின்றேன். அன்பிற்கினிய தமிழ் மக்களே!
இலங்கையில் நடைபெறும் அரசியல் கலாசாரங்கள் தொடர்பாகவும் நாட்டு நடப்புகள் தொடர்பாகவும் உங்களது கருத்துகளைத் தெரிந்துகொள்ளவும் எங்களது கருத்துகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் பத்து பேரோ இருபது பேரோ கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டுவதற்குக்கூட நீங்கள்தயாராக இல்லை என்ற சூழலை நீங்கள்தான் மாற்ற வேண்டும். அவ்வாறு எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் அடிக்கடி ஏற்படுத்தப்படும் கருத்துப் பகிர்வுகள்தான் ஆக்கபூர்வமான நபர்களையும் சரியான தலைமைகளையும் இனங்காண உதவி செய்யும்.
இவை ஒருபுறமிருக்க தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறுபட்ட மறைமுகத் திட்டங்களை உருவாக்கி வருகின்றது. தனக்கு சாதகமான புதிய கட்சிகளை உருவாக்க முனைகிறது. ஊடகங்களை தன்வசம் திருப்புவதற்கான
முயற்சிகளை மேற்கொள்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யமான சமூக வலைதளங்களை தனக்காக இயங்கச் செய்கின்றுத. அதற்கான நிதிகளும் வழங்கப்படுகின்றது. இவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை உருவாக்கவும் தமிழ் கட்சிகளால். தமிழ் தலைமைகளால் எதுவுமே செய்ய முடியாது என்னுத் பிழையான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சி செய்கிறது. எனவே புதிய கட்சிகள் தொடர்பிலும் புதிய நபர்கள் தொடர்பிலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
அதுமாத்திரமல்லாமல் தமிழ் மக்களின் தலையாய பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கான நிலையிலிருந்து தமிழ் கட்சிகளையும் தமிழ் மக்களையும் திசை திருப்பும் முகமாக பல்வேறுபட்ட அரசாங்கங்களும் ஏற்பாடு செய்து வருகின்றது. சிங்களரூபவ் பௌத்த மக்கள் இடங்கள் இல்லாத இடங்களில் புத்த கோயில்களை கட்டுகிறது. முப்படையினரின் தேவைக்காக தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை தொடர்ந்தும் சுவீகரித்து வருகின்றது. தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த புராதான இடங்கள் எல்லாம் தங்களுக்கே சொந்தம் என உரிமை கோரி அந்தக் காணிகளை பலாத்காரமாக பறிமுதல் செய்ய முயற்சித்து வருகின்றனர்.
உங்களது ஒத்துழைப்போ பங்களிப்போ இல்லாமல் நமது உரிமைகளை வென்றெடுப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகமோரூபவ் ஐரோப்பிய யூனியனோ அல்லது வேறுநாடுகளோ மனிதாபிமான அடிப்படையில்கூட எமது பிரச்சினையைக் கையாள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறி. எல்லா நாடுகளும் எல்லா அமைப்புகளும் தமக்கான நிகழ்ச்சிநிரல்களையும் தமது நலன்களையும் அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. ஆகவே ரூடவ்ழத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை என்பது இவர்களது நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றதா? இருந்தால் அதற்கான முதன்மை ஸ்தானம் இருக்கின்றதா போன்ற பல விடயங்களை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் ஆய்வு செய்து இவற்றை முன்னெடுத்துச் செல்ல கட்சியில் மத்தியில் ஐக்கியம் அவசியம் என்பதுமன் உங்களது பங்களிப்பும் மிகமிக அவசியமானது. யதார்த்த நிலைகளைப் புரிந்துகொண்டு முன்னேறிச்செல்ல உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.
உங்கள் சுரேஷ் க. பிரேமச்சந்திரன்







