என்னை கைது செய்யாதீர்…! அவசர அவசரமாக மனுத் தாக்கல் செய்த கோட்டாபய

தன்னைக் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதை தடுக்குமாறு அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில்,பொலிஸ் மா அதிபர் (IGP), குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாசிரியர் (OIC) மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Share this article