சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை!

ஏர் சீனா’ நிறுவனம், சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவையை மீண்டும் துவங்கு வதாக அறிவித்துள்ளது.

இந்தியா- சீனா உறவு, 2020ம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின் மோசமடைந்தது.
அதன் பின் நடந்த பல்வேறு கட்ட பேச்சுக்கு பின், இரு தரப்பு உறவு படிப்படியாக முன்னேற்றம் அடைந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், பிரதமர் மோடி ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவுக்கு சென்று சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பேச்சு நடத்தினார்.

அதில், இரு நாடுகளும் நேரடி விமான சேவையை மீண்டும் துவங்க ஒப்புக்கொண்டன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்திய தயாரிப்புகளுக்கு 50 சதவீதம் வரி விதித்த பின் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில், ‘ஏர் சீனா’ நிறுவனம், பீஜிங்கில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவையை மீண்டும் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து , ஏர் சீனா, டில்லிக்கு நேரடி விமான சேவையை மீண்டும் துவங்குகிறது எனவும் இது வெறும் பயணம் மட்டுமல்ல. நம்பிக்கை, வர்த்தகம், சுற்றுலாவை உள்ளடக் கியது,” எனவும் இந்தியாவில் உள்ள சீன துாதரகத்தின் செய்தி தொடர்பாளர் யு ஜிங் தெரிவித்துள்ளார்.

இதே போல் இந்தியாவின் ‘இண்டிகோ’ விமானம் சீனாவின் ஷாங்காய் நகருக்கு நேரடி விமானம் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் விமான நிறுவனங்கள், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமானங்களை இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article

More News