தடை விதிக்கப் பட்டிருந்த சிறிலங்கா இராணுவம் மீண்டும் ஐ.நா அமைதிப்படையில் 

2019 செப்டம்பரில், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி நடவடிக்கைகளுக்கான திணைக்களம், ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் பெரும்பாலான செயற்பாடுகளை இடைநிறுத்துவதாக அறிவித்தது. இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் போர்க்குற்றங்கள் செய்ததாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கையின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்குப் பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

2009-ல் கைதிகளைக் கொன்றதாகவும், பொதுமக்களைத் தாக்கியதாகவும் 2015-ஆம் ஆண்டு ஐ.நா. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சில்வாவின் நியமனத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு முன்னர் 2004 மற்றும் 2007-க்கு இடையில், ஹைட்டியில் (Haithi) அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த.100-க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் ஒரு சிறுவர் பாலியல் கும்பலுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அமைதி காக்கும் பணிகளில் செயல் பட இலங்கை இராணுவத்தினருக்கு தடை விதிக்கப்பட்டிருந்த

: சர்வதேச உண்மை  மற்றும் நீதித் திட்டம் (ITJP) போன்ற மனித உரிமை அமைப்புகள், இலங்கை இராணுவம் தனது துருப்புக்களை கடந்தகால குற்றங்களுக்காக முறையாகச் விசாரணை செய்யத் தவறிவிட்டது என்று வாதிட்டு, முழுமையான இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில்

சுமார் பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் ஹெய்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக சிறிலங்கா இராணுவம் அனுப்பப்படவுள்ளதாக மூத்த அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. அமைதி காப்பு நடவடிக்கைகள் திணைக்களத்துடன் நடைபெற்ற பேச்சுக்களைத் தொடர்ந்து, ஹைய்டியில் ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில் படையினரை இணைத்துக் கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

படையினரை அங்கு விரைவாக பணியில் அமர்த்துவது தொடர்பாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க்-அன்ட்ரே பிரான்ஷேவுடனும் பேச்சு நடத்தியுள்ளார்.

Share this article

More News