தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் இம் மாதம் 23ம் திகதி மாநிலம் முழுவதும் ஒரு கட்ட வாக்குப்பதிவாக நடக்க இருக்கிறது. 10 வருடங்களுக்கு மேலாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி(BJP), தென் மாநிலங்களில் அதுவும் குறிப்பாக திராவிட கட்சிகளின் பிடியில் அரை நூற்றாண்டுகளாக இருக்கும் தமிழ்நாட்டில் கால் பதித்திட பெருமுயற்சி எடுத்து வருகின்றது. வருகின்ற தேர்தலி்ல் மீனவர்கள் செறிந்து வாழும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பா.ஜ.க வுக்கு வெற்றி வாய்ப்பு கணிசமாக உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக அளவு வளங்களை இம்மாவட்டங்களில் செலவிட்டு வருகிறது. இப் பின்னணியில்
இலங்கையிலிருந்து முப்பது இந்திய மீனவர்கள் இன்று (07) தாயகம் திரும்ப அழைத்து வரப்பட்டு, தற்போது சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த விவரங்களை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் பகிர்ந்த உயர்ஸ்தானிகராலயம் அந்த மீனவர்களின் படத்தையும் பகிர்ந்துள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







