மாகாண சபை முறையும் அதிகாரப் பகிர்வும் என்ற தலைப்பில் கருத்தாடல் அரங்கு நாளை (சனிக்கிழமை) காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.
இக்கருத்தாடல் அரங்கில் மாகாண சபை அதிகாரங்கள் மற்றும் சவால்கள், அதிகாரப் பகிர்வு, மலைநாட்டு மக்களின் வாய்ப்புகள், தென்னிலங்கையின் தற்போதைய நிலை, நிலையான தீர்வுக்கான வழிகள் மற்றும் இன்றைய அரசியல் சூழல் போன்ற தலைப்புகளில் பலரும் கருத்துரைகள் வழங்கவுள்ளனர்.
அதன்படி, ஓய்வு நிலை மூத்த நிர்வாக அதிகாரியும் சமூக ஆய்வாளருமான இரேனியல் செல்வின், பொறியியலாளரும் ஓய்வு நிலை விரிவுரையாளருமான கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறுவுநரும் சமூக ஆய்வாளருமான பெரியசாமி முத்துலிங்கம், ஆய்வாளரும் கொள்கை பகுப்பாய்வாளருமான ஹரிந்திரா பி. திசாநாயக்க, வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் கருத்துரைகள் வழங்க உள்ளனர்.







