உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிக்கும் வகையிலான அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக பௌத்த பீடங்களின் நான்கு மகாநாயக்க தேரர்களும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்தப் பின்னணியில், ஜனாதிபதி அவர்களை நேரடியாகச் சந்தித்து அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி அண்மையில் சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்பில் அவர்கள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தங்களது எதிர்ப்பையும் நியாயப்பாடுகளையும் விளக்கியிருந்தனர்.
மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இந்தச் சந்திப்பு அடுத்த வாரத்தில் இடம்பெறக்கூடும் எனவும் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கத்தின் தரப்பிலுள்ள நியாயப்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விளக்கி, தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது







