ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒன்றுதான் கந்தன் கருணைப் படுகொலையாகும் ஈழப்போராட்ட அரங்கிலிருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை அகற்றும் நோக்குடன் அதனைத் தடை செய்ய விடுதலைப் புலிகள் முயற்சித்தார்கள்.
இதன் ஓர் அங்கமாக இவ் அமைப்பின் அரசியல் துறை, மருத்துவத்துறை, ஆயுதப்பிரிவு உறுப்பினர்கள் என 57 தோழர்களை சிறைப்பிடித்து அடைத்து வைத்தனர். இதில் பல சிரேஷ்ட தலைவர்களும் உள்ளடங்குவர்.
1987 மார்ச் 30ம் திகதி அவர்கள் அடைத்து வைக்கப்பட்டகந்தன் கருணை சிறையுள்ளேயே ஆகுதியாக்கப்பட்டனர்.
ஆற்றல் மிகு தோழர்களே! நீங்கள் மறக்கப்பட்டவர்களல்ல – உங்கள் பசுமையான நினைவுகளுடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கால் தடங்களை பதிக்கும்.
சுரேஸ் பிரமேச்சந்திரன்
தலைவர்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF)
0


இதோ அந்த கொடூரத் தாக்குதலி ல் வீரமரணத்தை தழுவிய EPRLF இன் மூத்த போராளிகள்
* தோழர் டாக்டர் பெஞ்சமின்
* தோழர் தாசன்
*தோழர் கதிர்
* தோழர் ஈஸ்வரன்.
*தோழர்அன்பரசன்
*தோழர் மஜீத்
*தோழர் ஆணந்தன் ( ராஜி)
*தோழர் கனேசரத்தினம்
*தோழர் செல்வன்
*தோழர் கெனடி
*தோழர் பாவலன்
*தோழர் ராசீக்







