இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2014ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச நிறுவனமான ‘ஸ்ரீலங்கன் கேட்டரிங்’ நிறுவனத்திடம் இருந்து பணம் செலுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில், ‘ஸ்ரீலங்கன் கேட்டரிங்’ நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியைப் பயன்படுத்தி குறித்த பணத்தை வழங்குமாறு செல்வாக்கு செலுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமட் மிஹால் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.







