மாகாண கல்வி அதிகாரங்களை பறிக்கும் அனுரவின் ஆட்சியின் சட்டவிரோத திட்டங்கள்…!

“மாற்றத்திற்காக வாக்களியுங்கள்” என்ற தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.) கோஷத்திற்குள் இனமோதலுக்கு தமிழ் மக்கள் விரும்பும் தீர்வும் உள்ளடங்குகிறது என்ற நம்பிக்கையில் தமிழ் மக்களில் கணிசமானோர் வாக்களித்தனர். தமிழ் மக்கள் போராடிப் பெற்ற மாகாண சபையை நாம் பாதுகாப்போம் என்கிற அநுரகுமாரவின் தேர்தல் பிரச்சாரங்களும், அதற்கு மேலாக தான் ஆட்சிக்கு வந்தே இனமோதல் தீர்வுக்கு மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் நடைபெற்று முடிவுறாமல் இருந்த செயற்பாட்டை முடிவுறுத்தி புதிய அரசியல் யாப்பினூடாக நிரந்தர தீர்வு தருவேன் என்ற பிரச்சாரங்களும் […]
இணையதளம் புத்துணர்ச்சியுடனும் புத்தெழுச்சியுடனும் புதுப்பொலிவுடனும் பீடுநடைபோட வாழ்த்துகள்…!

இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் ஒரு விசித்திரமானதும் கவர்ச்சிகரமானதுமான வடிவத்தில் அரசால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அதனுடைய உண்மைத் தன்மையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. இன்று இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் என்பன இளைஞர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபல்யமான தொடர்பாடல் சாதனமாக இருப்பதன் காரணத்தால் நாங்கள் மீண்டும் எமது இணையதளத்தை செயற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ் பரப்பில் இணையதளங்களும் சமூக வலைத்தளங்களும் நூற்றுக்கணக்கில் பல்கிப் பெருகி இருக்கின்றன. அவரவர் தமக்கேற்றவாறு செய்திகளைத் […]
எங்களது வரலாற்றின் சுவடுகள் வருங்கால அரசியல் திசைகாட்டி

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் ஸ்தாபகத் தலைவர், எமது அரசியல் வழிகாட்டி தோழர் பத்மநாபா அவர்களின் புரட்சிகரமான சிந்தனைகளையும், எமது இயக்கத்தின் தியாகம் செறிந்த வரலாற்று ஆவணங்களையும் டிஜிட்டல் தளத்தில் ஆவணப்படுத்தும் இந்தப் புதிய முயற்சிக்கு, கட்சியின் செயலாளர் என்ற வகையில் எனது உணர்வுபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். “மக்களுக்கு மேலாக எவரும் இல்லை; மக்களின் பலமே எமது பலம்” என்ற தோழர் பத்மநாபாவின் அவர்களின் உன்னதமான பொன்மொழிக்கு உயிர் கொடுக்கும் வகையில், எமது […]
எமக்கோர் இணையத்தளம்…..!

ஈழவிடுதலைப் போராட்டத்தில் EPRLF அமைப்பானது மற்றைய ஆயுத அமைப்புகளை விட தனித்துவமான ஒன்றாக திகழ்ந்தது என்றால் அது மிகையில்லை. தற்கால அரசியல் அவதானிகளும் புத்திஜீவிகளும் இன்றைய அரசியல் வெற்றிடத்தை உணர்ந்து EPRLF ஒன்றே இந்த வெற்றிடத்தை நிரப்பத் தகுதியானது என எமது கடந்தகாலத்தை எமக்கு நினைவூட்டத் தொடங்கியுள்ளதும் அதற்குச் சான்றாகும். அவர்கள் குறிப்பிட்ட சில தகமைகளை இங்கே குறிப்பிடுவதன் மூலம் நாங்களே ஒருதடவை எம்மை திரும்பிப் பார்க்க முடியும். * சமூகவிடுதலையில் இருந்துதான் ஒரு தேசிய இனத்தின் […]
அதிகாரத்தின் நிர்வாணக் கோலம்: எப்ஸ்டீன் சிஸ்டம் – ஒரு சிறப்புப் பார்வை

பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், அதிகாரம் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் மறைக்கலாம் என்று நினைக்கும் ஒரு கும்பலின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவணங்கள் தான் இன்றைய உலகையே அதிரச் செய்து கொண்டிருக்கும் “எப்ஸ்டீன் கோப்புகள்”. ஒரு சாதாரணக் கணித ஆசிரியராகத் தொடங்கி, உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரச வம்சத்தினரைத் தனது விரல் நுனியில் ஆட்டிப்படைத்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் மர்ம மனிதனின் பின்னணி என்ன? பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களைப் பறிக்க வைத்தது […]
78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்!

இலங்கைத் தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. இலங்கைத் தீவின் ஒரு பகுதி மக்கள் அதனை சுதந்திர தினம் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அதனை கரிநாள் என்று கருதுகிறார்கள். தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். கடந்த 4 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் சிங்கக் கொடிகளை காணக் கூடியதாக இருந்தது. வட மாகாண ஆளுநர் அலுவலகம் வழமையை விட வித்தியாசமாக பெருமெடுப்பில் அந்த நாளைக் கொண்டாடியது. […]