இணையதளம் புத்துணர்ச்சியுடனும் புத்தெழுச்சியுடனும் புதுப்பொலிவுடனும் பீடுநடைபோட வாழ்த்துகள்…!

இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் ஒரு விசித்திரமானதும் கவர்ச்சிகரமானதுமான வடிவத்தில் அரசால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அதனுடைய உண்மைத் தன்மையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. இன்று இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் என்பன இளைஞர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபல்யமான தொடர்பாடல் சாதனமாக இருப்பதன் காரணத்தால் நாங்கள் மீண்டும் எமது இணையதளத்தை செயற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ் பரப்பில் இணையதளங்களும் சமூக வலைத்தளங்களும் நூற்றுக்கணக்கில் பல்கிப் பெருகி இருக்கின்றன. அவரவர் தமக்கேற்றவாறு செய்திகளைத் […]

எமக்கோர் இணையத்தளம்…..!

ஈழவிடுதலைப் போராட்டத்தில் EPRLF அமைப்பானது மற்றைய ஆயுத அமைப்புகளை விட தனித்துவமான ஒன்றாக திகழ்ந்தது என்றால் அது மிகையில்லை. தற்கால அரசியல் அவதானிகளும் புத்திஜீவிகளும் இன்றைய அரசியல் வெற்றிடத்தை உணர்ந்து EPRLF ஒன்றே இந்த வெற்றிடத்தை நிரப்பத் தகுதியானது என எமது கடந்தகாலத்தை எமக்கு நினைவூட்டத் தொடங்கியுள்ளதும் அதற்குச் சான்றாகும். அவர்கள் குறிப்பிட்ட சில தகமைகளை இங்கே குறிப்பிடுவதன் மூலம் நாங்களே ஒருதடவை எம்மை திரும்பிப் பார்க்க முடியும். * சமூகவிடுதலையில் இருந்துதான் ஒரு தேசிய இனத்தின் […]

இலங்கையின் நம்பகமான நண்பன் சீனா : அமைச்சர் விஜித ஹேரத் புகழாரம்

சீனா,இலங்கையின் மதிப்புமிக்க மற்றும் நம்பகமான நண்பனாக இருந்து வருகிறது. எமது வரலாற்றின் முக்கியமான தருணங்களில் ஆதரவை வழங்கி வருகிறது. எமது வளர்ச்சி முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஷங்க்ரி லா விடுதியில் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி நடைபெற்ற சீன சந்திர புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில், சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்த திடசங்கற்பம் சீனாவுடனான […]

அதிகாரத்தின் நிர்வாணக் கோலம்: எப்ஸ்டீன் சிஸ்டம் – ஒரு சிறப்புப் பார்வை

பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், அதிகாரம் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் மறைக்கலாம் என்று நினைக்கும் ஒரு கும்பலின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவணங்கள் தான் இன்றைய உலகையே அதிரச் செய்து கொண்டிருக்கும் “எப்ஸ்டீன் கோப்புகள்”. ஒரு சாதாரணக் கணித ஆசிரியராகத் தொடங்கி, உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரச வம்சத்தினரைத் தனது விரல் நுனியில் ஆட்டிப்படைத்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் மர்ம மனிதனின் பின்னணி என்ன? பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களைப் பறிக்க வைத்தது […]

78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்!

இலங்கைத் தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. இலங்கைத் தீவின் ஒரு பகுதி மக்கள் அதனை சுதந்திர தினம் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அதனை கரிநாள் என்று கருதுகிறார்கள். தங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். கடந்த 4 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் அதிகம் சிங்கக் கொடிகளை காணக்  கூடியதாக இருந்தது. வட மாகாண ஆளுநர் அலுவலகம் வழமையை விட வித்தியாசமாக பெருமெடுப்பில் அந்த நாளைக்  கொண்டாடியது. […]

தமிழ் மக்கள் இராணுவக் கெடுபிடியில்: சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

இலங்கையின் வட பகுதியில் தமிழ் மக்கள் இராணுவ நெருக்குவாரத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், கடந்த ஒரு மாத காலமாக இங்கு நடைபெற்று வருகின்ற இராணுவ சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள் என்பவற்றை முப்படைகளின் தளபதியாகிய ஜனாதிபதி உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருக்கின்றது.   கோபி என்பவரின் தலைமையில் விடுதலைப் புலிகள் மீண்டும் அணி சேர முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு பத்துலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து, இந்தத் தேடுதல் […]

பட்ஜெட்டில் பயனில்லை: சிவசக்தி ஆனந்தன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகள் வரவு-செலவுத்திட்டத்தில் நிறைவேற்றப்படவில்லையென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.   வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின்மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் கலந்துகொள்ளாமைக்கான காரணம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு […]