இணையதளம் புத்துணர்ச்சியுடனும் புத்தெழுச்சியுடனும் புதுப்பொலிவுடனும் பீடுநடைபோட வாழ்த்துகள்…!

இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் ஒரு விசித்திரமானதும் கவர்ச்சிகரமானதுமான வடிவத்தில் அரசால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அதனுடைய உண்மைத் தன்மையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. இன்று இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் என்பன இளைஞர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபல்யமான தொடர்பாடல் சாதனமாக இருப்பதன் காரணத்தால் நாங்கள் மீண்டும் எமது இணையதளத்தை செயற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ் பரப்பில் இணையதளங்களும் சமூக வலைத்தளங்களும் நூற்றுக்கணக்கில் பல்கிப் பெருகி இருக்கின்றன. அவரவர் தமக்கேற்றவாறு செய்திகளைத் […]

எங்களது வரலாற்றின் சுவடுகள் வருங்கால அரசியல் திசைகாட்டி

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் ஸ்தாபகத் தலைவர், எமது அரசியல் வழிகாட்டி தோழர் பத்மநாபா அவர்களின் புரட்சிகரமான சிந்தனைகளையும், எமது இயக்கத்தின் தியாகம் செறிந்த வரலாற்று ஆவணங்களையும் டிஜிட்டல் தளத்தில் ஆவணப்படுத்தும் இந்தப் புதிய முயற்சிக்கு, கட்சியின் செயலாளர் என்ற வகையில் எனது உணர்வுபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். “மக்களுக்கு மேலாக எவரும் இல்லை; மக்களின் பலமே எமது பலம்” என்ற தோழர் பத்மநாபாவின் அவர்களின் உன்னதமான பொன்மொழிக்கு உயிர் கொடுக்கும் வகையில், எமது […]

எமக்கோர் இணையத்தளம்…..!

ஈழவிடுதலைப் போராட்டத்தில் EPRLF அமைப்பானது மற்றைய ஆயுத அமைப்புகளை விட தனித்துவமான ஒன்றாக திகழ்ந்தது என்றால் அது மிகையில்லை. தற்கால அரசியல் அவதானிகளும் புத்திஜீவிகளும் இன்றைய அரசியல் வெற்றிடத்தை உணர்ந்து EPRLF ஒன்றே இந்த வெற்றிடத்தை நிரப்பத் தகுதியானது என எமது கடந்தகாலத்தை எமக்கு நினைவூட்டத் தொடங்கியுள்ளதும் அதற்குச் சான்றாகும். அவர்கள் குறிப்பிட்ட சில தகமைகளை இங்கே குறிப்பிடுவதன் மூலம் நாங்களே ஒருதடவை எம்மை திரும்பிப் பார்க்க முடியும். * சமூகவிடுதலையில் இருந்துதான் ஒரு தேசிய இனத்தின் […]

தமிழ் மக்கள் இராணுவக் கெடுபிடியில்: சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

இலங்கையின் வட பகுதியில் தமிழ் மக்கள் இராணுவ நெருக்குவாரத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், கடந்த ஒரு மாத காலமாக இங்கு நடைபெற்று வருகின்ற இராணுவ சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள் என்பவற்றை முப்படைகளின் தளபதியாகிய ஜனாதிபதி உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருக்கின்றது.   கோபி என்பவரின் தலைமையில் விடுதலைப் புலிகள் மீண்டும் அணி சேர முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு பத்துலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து, இந்தத் தேடுதல் […]

பட்ஜெட்டில் பயனில்லை: சிவசக்தி ஆனந்தன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகள் வரவு-செலவுத்திட்டத்தில் நிறைவேற்றப்படவில்லையென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.   வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின்மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் கலந்துகொள்ளாமைக்கான காரணம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு […]

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீடம் சந்திப்பும் எடுக்கப்பட்ட தீர்மானங்களும்

அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம், வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையரின் இலங்கை தொடர்பான கருத்துக்கள் அதனைச் சமாளிக்கும் வiயிலான இலங்கை அரசாங்கத்தின் கபடத்தனமான செயற்பாடுகள் ஆகியவை தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீடம் கடந்த சனிக்கிழமை அன்று மாலை கூடி விரிவாக ஆராய்ந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாண கல்வி அமைச்சரும் […]