மாகாண கல்வி அதிகாரங்களை பறிக்கும் அனுரவின் ஆட்சியின் சட்டவிரோத திட்டங்கள்…!

“மாற்றத்திற்காக வாக்களியுங்கள்” என்ற தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.) கோஷத்திற்குள் இனமோதலுக்கு தமிழ் மக்கள் விரும்பும் தீர்வும் உள்ளடங்குகிறது என்ற நம்பிக்கையில் தமிழ் மக்களில் கணிசமானோர் வாக்களித்தனர். தமிழ் மக்கள் போராடிப் பெற்ற மாகாண சபையை நாம் பாதுகாப்போம் என்கிற அநுரகுமாரவின் தேர்தல் பிரச்சாரங்களும், அதற்கு மேலாக தான் ஆட்சிக்கு வந்தே இனமோதல் தீர்வுக்கு மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் நடைபெற்று முடிவுறாமல் இருந்த செயற்பாட்டை முடிவுறுத்தி புதிய அரசியல் யாப்பினூடாக நிரந்தர தீர்வு தருவேன் என்ற பிரச்சாரங்களும் […]
இணையதளம் புத்துணர்ச்சியுடனும் புத்தெழுச்சியுடனும் புதுப்பொலிவுடனும் பீடுநடைபோட வாழ்த்துகள்…!

இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் ஒரு விசித்திரமானதும் கவர்ச்சிகரமானதுமான வடிவத்தில் அரசால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அதனுடைய உண்மைத் தன்மையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. இன்று இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் என்பன இளைஞர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபல்யமான தொடர்பாடல் சாதனமாக இருப்பதன் காரணத்தால் நாங்கள் மீண்டும் எமது இணையதளத்தை செயற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ் பரப்பில் இணையதளங்களும் சமூக வலைத்தளங்களும் நூற்றுக்கணக்கில் பல்கிப் பெருகி இருக்கின்றன. அவரவர் தமக்கேற்றவாறு செய்திகளைத் […]
எங்களது வரலாற்றின் சுவடுகள் வருங்கால அரசியல் திசைகாட்டி

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் ஸ்தாபகத் தலைவர், எமது அரசியல் வழிகாட்டி தோழர் பத்மநாபா அவர்களின் புரட்சிகரமான சிந்தனைகளையும், எமது இயக்கத்தின் தியாகம் செறிந்த வரலாற்று ஆவணங்களையும் டிஜிட்டல் தளத்தில் ஆவணப்படுத்தும் இந்தப் புதிய முயற்சிக்கு, கட்சியின் செயலாளர் என்ற வகையில் எனது உணர்வுபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். “மக்களுக்கு மேலாக எவரும் இல்லை; மக்களின் பலமே எமது பலம்” என்ற தோழர் பத்மநாபாவின் அவர்களின் உன்னதமான பொன்மொழிக்கு உயிர் கொடுக்கும் வகையில், எமது […]
எமக்கோர் இணையத்தளம்…..!

ஈழவிடுதலைப் போராட்டத்தில் EPRLF அமைப்பானது மற்றைய ஆயுத அமைப்புகளை விட தனித்துவமான ஒன்றாக திகழ்ந்தது என்றால் அது மிகையில்லை. தற்கால அரசியல் அவதானிகளும் புத்திஜீவிகளும் இன்றைய அரசியல் வெற்றிடத்தை உணர்ந்து EPRLF ஒன்றே இந்த வெற்றிடத்தை நிரப்பத் தகுதியானது என எமது கடந்தகாலத்தை எமக்கு நினைவூட்டத் தொடங்கியுள்ளதும் அதற்குச் சான்றாகும். அவர்கள் குறிப்பிட்ட சில தகமைகளை இங்கே குறிப்பிடுவதன் மூலம் நாங்களே ஒருதடவை எம்மை திரும்பிப் பார்க்க முடியும். * சமூகவிடுதலையில் இருந்துதான் ஒரு தேசிய இனத்தின் […]
மக்கள் பிரதிநிதித்துவத்தின் தார்மீகப் பொறுப்பும் ஓய்வூதிய சர்ச்சையும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தான் பெற்று வந்த ஓய்வூதியத்தை நிறுத்தினால் சாகப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரும் 1999 ஜனாதிபதி வேட்பாளருமான நந்தன குணதிலக கடந்த ஓகஸ்டில் செய்த எச்சரிக்கை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. தன்னை ஒரு ‘கெரில்லா’ என்று வர்ணித்த அவர் தன்னந் தனியாளாக சாகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் வாழ்வாதாரத்தை இழந்தால் வேறு பலரையும் கொலை செய்துவிட்டுத் தானும் உயிரை மாய்ப்பதற்கு […]
இலங்கையின் நம்பகமான நண்பன் சீனா : அமைச்சர் விஜித ஹேரத் புகழாரம்

சீனா,இலங்கையின் மதிப்புமிக்க மற்றும் நம்பகமான நண்பனாக இருந்து வருகிறது. எமது வரலாற்றின் முக்கியமான தருணங்களில் ஆதரவை வழங்கி வருகிறது. எமது வளர்ச்சி முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஷங்க்ரி லா விடுதியில் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி நடைபெற்ற சீன சந்திர புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில், சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்த திடசங்கற்பம் சீனாவுடனான […]
அதிகாரத்தின் நிர்வாணக் கோலம்: எப்ஸ்டீன் சிஸ்டம் – ஒரு சிறப்புப் பார்வை

பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், அதிகாரம் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் மறைக்கலாம் என்று நினைக்கும் ஒரு கும்பலின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவணங்கள் தான் இன்றைய உலகையே அதிரச் செய்து கொண்டிருக்கும் “எப்ஸ்டீன் கோப்புகள்”. ஒரு சாதாரணக் கணித ஆசிரியராகத் தொடங்கி, உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரச வம்சத்தினரைத் தனது விரல் நுனியில் ஆட்டிப்படைத்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் மர்ம மனிதனின் பின்னணி என்ன? பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களைப் பறிக்க வைத்தது […]