அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்! இலங்கையிலும் விமான சேவைகள் இரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் காரணமாக, மத்திய கிழக்கு இடங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் இன்று (03) இரத்து செய்ய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு செய்துள்ளது. தீவிரமடையும் போர் பதற்றம் மற்றும் வான்வெளி மூடல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் இணைப்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்க திட்டமிடப்பட்ட 57 விமானங்கள் இன்று (03) இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]