தமிழ் மக்கள் இராணுவக் கெடுபிடியில்: சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

இலங்கையின் வட பகுதியில் தமிழ் மக்கள் இராணுவ நெருக்குவாரத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், கடந்த ஒரு மாத காலமாக இங்கு நடைபெற்று வருகின்ற இராணுவ சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள் என்பவற்றை முப்படைகளின் தளபதியாகிய ஜனாதிபதி உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருக்கின்றது. கோபி என்பவரின் தலைமையில் விடுதலைப் புலிகள் மீண்டும் அணி சேர முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு பத்துலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து, இந்தத் தேடுதல் […]
பட்ஜெட்டில் பயனில்லை: சிவசக்தி ஆனந்தன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகள் வரவு-செலவுத்திட்டத்தில் நிறைவேற்றப்படவில்லையென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின்மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆகியோர் கலந்துகொள்ளாமைக்கான காரணம் குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு […]
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீடம் சந்திப்பும் எடுக்கப்பட்ட தீர்மானங்களும்

அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம், வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையரின் இலங்கை தொடர்பான கருத்துக்கள் அதனைச் சமாளிக்கும் வiயிலான இலங்கை அரசாங்கத்தின் கபடத்தனமான செயற்பாடுகள் ஆகியவை தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீடம் கடந்த சனிக்கிழமை அன்று மாலை கூடி விரிவாக ஆராய்ந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாண கல்வி அமைச்சரும் […]