ஆட்சியில் அமர்ந்து 2 வருடங்கள் ஆகியும், தமிழர் வாக்குகளை பெற, கொடுத்த வாக்குறுதிகளில் எதனை நிறைவேற்றினார்கள்? சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

புதிய அரசாங்கம் பதவியேற்று, 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் கோரி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் யாப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2 வருடங்கள் கழிந்த நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.

 

குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளில் மக்கள் தமது சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்தியா வழங்கிய 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.

 

தேர்தல் காலத்தில் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எல்லளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித கரிசனையும் காட்டாது இழுத்தடிக்கின்றனர்

 

அது மாத்திரமின்றி, திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல் துறை சார்ந்த விடயங்ளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

இவ்வாறான விடயங்களை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்னர்.

Share this article

More News