வவுனியாவில் நினைவு கூரப்பட்ட தோழர் பத்மநாபா அவர்களின் 75வது பிறந்த தினம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான தோழர் க. பத்மநாபா அவர்களின் 75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று
காலை 9.30 மணிக்கு,
மணிக்கூட்டு கோபுரத்திற்கருகில் அமைந்துள்ள உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றதுடன்

அதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நினைவு கூட்டமும் நடைபெற்றது. இந் நிகழ்வில் கட்சியின் செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள்,மாவட்டக்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,தோழர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this article

More News