இந்திய மக்கள் அவையில் மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா தோல்வி – உண்மை என்னவென்றால் இது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவே அல்ல – ராகுல் காந்தி

மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தும் அரசியலமைப்பு திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் வாக்கெடுப்பிற்குப் பிறகு தோல்வியடைந்தது.
மசோதாவுக்கு ஆதரவான வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கைப் பெற பாஜக கூட்டணி தவறிவிட்டது
மீதமுள்ள இரண்டு திருத்த மசோதாக்களையும் தாக்கல் செய்ய வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
முன்னதாக மசோதா குறித்த விவாதத்திற்குப் பிறகு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகள் பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

”இந்த மசோதாவின் நோக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே ஆகும். சில நாடாளுமன்றத் தொகுதிகளில் 39 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அப்படியிருக்கும்போதுஇ ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் மீது எப்படி கவனம் செலுத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் அமித் ஷா.
”நாடாளுமன்ற இடங்களை அதிகரிப்பதை எதிர்ப்பவர்கள்இ தாங்கள் எஸ்சி,எஸ்டி(SC,ST) பிரிவினருக்கான இடங்களை அதிகரிப்பதையும் எதிர்க்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியலமைப்பில் தொகுதி மறுவரையறைக்கான விதிகள் உள்ளன. சிலர் தெற்கு – வடக்கு என்ற பிரிவினை வாதத்தைத் தூண்டி வருகிறார்கள்.

தென் இந்தியாவின் இடங்கள் குறைந்துவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் நாட்டின் பிற பகுதிகளுக்கு எவ்வளவு உரிமை உண்டோ,அதே அளவு உரிமை தென் இந்தியாவிற்கும் உண்டு. இவர்கள் வீணான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள்,” என்று அமித் ஷா விமர்சித்தார்.
மேலும்  ”இந்த மசோதாவின் நோக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே ஆகும். சில நாடாளுமன்றத் தொகுதிகளில் 39 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அப்படியிருக்கும்போது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் மீது எப்படி கவனம் செலுத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் அமித் ஷா.

”நாடாளுமன்ற இடங்களை அதிகரிப்பதை எதிர்ப்பவர்கள், தாங்கள் எஸ்சிஇ எஸ்டி பிரிவினருக்கான இடங்களை அதிகரிப்பதையும் எதிர்க்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியலமைப்பில் தொகுதி மறுவரையறைக்கான விதிகள் உள்ளன. சிலர் தெற்கு – வடக்கு என்ற பிரிவினை வாதத்தைத் தூண்டி வருகிறார்கள்.
தென் இந்தியாவின் இடங்கள் குறைந்துவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். நாடாளுமன்றத்தில் நாட்டின் பிற பகுதிகளுக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அதே அளவு உரிமை தென் இந்தியாவிற்கும் உண்டு. இவர்கள் வீணான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள்,” என்று அமித் ஷா விமர்சித்தார்.

முன்னதாக நடைபெற்ற விவாதத்தில்இ மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
“முதல் உண்மை என்னவென்றால், இது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவே அல்ல,” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா ஏற்கெனவே 2023-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த மசோதா நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் ஒரு முயற்சியாகும். இது எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிரானது; அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒரு செயல்திட்டம் ,” என்று கூறினார்
மேலும் அவர் கூறுகையில், “இந்த மசோதாவுக்கும் பெண்கள் அதிகாரம் அளிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவே முயற்சிக்கிறீர்கள். இந்த மசோதா தேச விரோதமானது. இதைச் செய்ய நாங்கள் அரசை அனுமதிக்க மாட்டோம். தென்னிந்தியா மற்றும் வட இந்தியா இடையே பாகுபாடு காட்டப்படுகிறது. தலித் மற்றும் பழங்குடியினரின் பங்களிப்பு குறைந்து வருகிறது,” என்று குற்றம் சாட்டினார்.

தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு நேற்று (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்தது. இவை மகளிருக்கு 33ம% இட ஒதுக்கீடு அமல்படுத்துவதை நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையுடன் இணைக்கிறது.

தற்போதுள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது இந்த மசோதாக்களின் ஒரு நோக்கமாகும்.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தென் மாநிலங்களில் கடும் ஆட்சேபனை இருந்த நிலையில், இதுகுறித்த விவாதம் மக்களவையில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.

முன்னதாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.

அவர் பேசுகையில், “இந்த சிறப்பு கூட்டத்தில் அரசு மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தேர்தல்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக அவசரகதியில் இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என் கட்சி மற்றும் மாநிலம் சார்பாக இந்த மசோதாக்களை எதிர்க்கிறேன். இந்திய கூட்டாட்சி தத்துவம் மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் தாக்குதல் இது.” என்றார்.

மேலும்இ ” 1976ல் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543ஆக முடக்கப்பட்டது. மத்திய அரசின் வலியுறுத்தலுக்கு ஏற்ப மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தென் மாநிலங்கள் இறங்கின. அதன் வாயிலாக, மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது.” என்றார்.

Share this article

More News