ஈரானிலிருந்து இஸ்ரேல் நோக்கி புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்!

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இஸ்ரேல் நோக்கி மீண்டும் புதிய அலை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இது ‘ஒபரேஷன் ட்ரூ ப்ரோமிஸ் 4’ என்ற பெயரில் நடத்தப்படும் தொடர் பதிலடித் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.

இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவம் (IDF) இந்த ஏவுகணை அலையை உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கும் தகவலின்படி,

இஸ்ரேலின் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து பல அலைகளாக (75வது, 76வது, 77வது உட்பட) ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

சில ஏவுகணைகளில் cluster வெடிமருந்துகள் (cluster warheads) பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் Iron Dome, David’s Sling போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளன.

Share this article

More News