ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் – அமெரிக்கா!

யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலானது, பிராந்திய கடல் எல்லைகளிலிருந்து ஈரானின் இராணுவ இலக்குகள் மீது தமது வான்வழி தாக்குதல்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

குறித்த போர்க்கப்பலை இலக்குவைத்து க்ரூஸ் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் அதன் காரணமாக கப்பலின் நிலையை மாற்ற வேண்டியிருந்தது என்றும் ஈரான் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்கா இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

Share this article

More News