கொழும்பில் மக்கள் போராட்டம் வெடித்தது

முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, பொல்தூவ சந்தியிலிருந்து நாடாளுமன்ற வீதி வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் தாமதங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

எனவே, வாகன சாரதிகள் முடிந்தவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராக, மக்கள் போராட்ட இயக்கம் முன்னெடுத்துள்ள எதிர்ப்புப் பேரணி தற்போது நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

பொல்தூவ சந்தியில் ஆரம்பமான இந்தப் போராட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவு ஒன்றையும் வழங்கியுள்ளனர்.

எனினும், போராட்டக்காரர்கள் அந்த உத்தரவை ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை பாதுகாப்புஇதனையடுத்து, பொல்தூவ சந்தி பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Share this article

More News