செம்மணி மனிதப் புதைகுழி : மனித எச்சங்களின் மரபணு பரிசோதனை செய்யப்படும்.  காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் (OMP) தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

 

குறித்த விடயத்தை காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் (OMP) தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

செம்மணி மனிதப் புதைகுழி

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 584 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

மீட்கப்பட்ட மனித எச்சங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நோக்கில், அவர்களது உறவினர்களிடமிருந்து இரத்த மாதிரிகளைச் சேகரித்து மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். .

 

கண்டெடுக்கப்பட்ட எலுப்புக்கூடுகளின் மரபணு சோதனை செய்யப்பட வேண்டும் என கடந்த வாரம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகபேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறித்திய நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த வின் இக் கூற்று முக்கியத்துவம் பெறுகின்றது .

Share this article

More News