மன்னார் – அல்லைப்பிட்டி பங்குத் தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிரவுன் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் உள்ளிட்ட 2006ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.
அமைதிப் பேரணியாக இடம்பெற்ற நிகழ்வு புனித பிலிப் நேரியார் ஆலயத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து நினைவஞ்சலி நிகழ்வும் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.
2006 ஆகஸ்ட் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது அருட்தந்தை ஜிம் பிரவுன் அடிகளாரும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸும் காணாமலாக்கப்பட்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.






