மந்துவில் சின்னச்சந்தையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் [DTNA] நடத்திய முள்ளிவாய்க்கால் கஞ்சி ஊற்றல் நிகழ்வு
மந்துவில் பகுதி EPRLF இன் மாவட்டக்
கமிட்டி உறுப்பினர்களான தனதீஸ் மற்றும் தினேஸ்( பிரதேச சபை உறுப்பினர்) ஆகியோரின் ஏற்பாட்டில் ஜனநாயகத்தமிழ்தேசியக்கூட்டமைப்பு [ DTNA] இன் சார்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ஊற்றும் அஞ்சலி நிகழ்வானது மந்துவில் சின்னச்சந்தை முன்றலில்இன்று 16.05.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.
ஊர்மக்கள் கலந்து கொண்டு ஈகைச்சுடருக்கு அஞ்சலி செய்து கஞ்சி அருந்தி சென்றனர்.
சாவகச்சேரி பிரதேசசபையின் தவிசாளர் திரு குகன் அவர்கள், நகரசபை உதவி தவிசாளர் கிஷோர், முன்னாள் வடக்குமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், பிரதேசசபை உறுப்பினர்கள் மயூரன், அசோகலிங்கம், நகரசபை உறுப்பினர் கோகுலன், ஆகியோர் கலந்துகொண்டனர்.







