தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ! இந்திய துணை ஜனாதிபதி

வட,கிழக்கைப் பிரதிநிதித்துவம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (19.04.26) தாஜ் சமுத்திரா விடுதியில் நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தலைவர்கள் தங்களது அறிமுகத்துடன் சமகால நிலைமைகள் மற்றும் இந்தியாவிடத்திலான கோரிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்களை வெளிப்படுத்தினர். அத்துடன் துணை ஜனாதிபதியும் இந்தியாவின் ஒத்துழைப்பக்கள் எதிர்கல ஆதரவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சந்திப்பு நிறைவடைந்து உத்தியோக பூர்வமான புகைப்படம் எடுக்கப்பதற்கு தயரான போது தலைவர்கள் ஒவ்வொருவராக துணை ஜனாதிபதியின் அருகில் சென்று விடைபெறும் கருத்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சி சார்பில் CVKசிவஞானம், சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செலவராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this article

More News