36 ஆவது தியாகிகள் தினம் இன்றைய தினம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா நகர மத்தியில் காணப்படும் பத்மநாபா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் வவுனியாவில் அமைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.அதனை தொடர்ந்து கட்சியின் எதிர்கால வேலை திட்டங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பிலும் கலந்தாலோசிக்கபட்டது.
இந் நிகழ்வில் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், அரசியல் உயர்பீட உறுப்பினர் அருந்தவராஜா முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கட்சியின் தோழர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








