தியாகி சிவகுமாரன் சிலை முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

DTNA யின் வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினரும் EPRLF யாழ்மாவட்டக்கமிட்டி உறுப்பினருமான தோழர் கேசவன் மற்றும் அவர்தம் தோழர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது
இன்று காலை 10 மணியளவில் உரும்பிராய் சந்தியில் தியாகி சிவகுமாரன் சிலை முன்றலில் நடைபெற்றது.

தியாகி சிவகுமாரனுக்கு EPRLFஇன் தலைவரும் DTNA பேச்சாளருமான தோழர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் மாலை அணிவித்து முள்ளிலாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொடக்கி வைத்தார். தொடர்ந்து தியாகி ஒருவரின் தாயார்
அஞ்சலி தீபம் ஏற்றிவைக்க மலரஞ்சலியும்
முள்ளிவாய்க்கால் கஞ்சி ஊற்றும் நிகழ்வும் பெருந்திரளான மக்கள் ஆதரவோடு நடந்தேறியது.

தோழர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் அஞ்சலி உரையாற்றியதை தொடர்ந்து 100 பயனாளிகளுக்கு உணவுப்பொதியும் வழங்கப்பட்டது.

மதியம் 1மணிவரை கஞ்சி விநியோகம் நடந்து கொண்டே இருந்தது பலரது மனதையும் நிறைத்தது.

Share this article

More News