மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட 36வது தியாகிகள் தினம்..!

 

மன்னாரில் இன்று (19.06.2026)மாலை தியாகிகள் தின நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.மாலை 5:00 மணியளவில் ஆரம்பமான இந்த அஞ்சலி கூட்டமானது, மாலை 6:00 மணி வரை நடைபெற்றது.

தோழர் பத்மநாபா அவர்களும் அவருடன் உயிர் நீத்த பன்னிரு தோழர்களையும், ஈழ போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து போராளிகளையும் நினைவுகூறும் நாளாகும்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் சம்பூர்ணம் இரட்னசிங்கம் (குமரேஸ்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், நினைவுரையையும் ஆற்றினார். அவருடன் மன்னார் நகர முதல்வர் வசந்தன் மற்றும் புளொட் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் தோழர் ஜோன்சன் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும், நகர சபை உறுப்பினர் தோழர் ரஜினி, முன்னாள் நகர சபை உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், தோழர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Share this article

More News