
நவம்பர் 19 தோழர் பத்மநாபா வின் 75 வது பிறந்ததினம்.அது ‘தோழமை தினம் ‘ நிகழ்வாக மன்னார் EPRLF அலுவலகத்தில் தோழர் குமரேஸ் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முழுக்க முழுக்க எமது தோழர்களின் குடும்பங்களும் உறவுகளும் ஒன்றுகூடி தோழரின் படத்துக்கு மாலை அணிவித்து தீப விளக்கேற்றி சிறப்பித்தனர்.
ஒரு புனிதமான நிகழ்வாகவே இது நடந்தேறியது மனதுக்கு நிறைவாக இருந்தது.
இந்த நிகழ்வில் எமதுகட்சியின் தலைவர் தோழர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
அவரோடு அரசியல் உயர்பீட உறுப்பினர் தோழர் குகன்.[கமலாகரன்] , தோழர் வாணி , தோழர் ராதேயன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தோழர் குமரேஸ், தோழர் குகன் இருவரும் தோழர் பத்மநாபாவின் சிறப்புகளையும் அவரது இழப்பின் பின்னரான 36 வருடங்களும் அதாவது இன்று வரை அவரது இலட்சியங்களை நெஞ்சில் சுமந்தபடி தோழர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எமது கட்சியை வழிநடத்திய சிறப்புகள் பற்றியும் உரையாற்றினர்.
தோழர் பத்மநாபாவின் அரசியல் சிந்தனைகள், இலட்சியங்கள் மற்றும் மக்கள் நலனுக்கான அவரது அர்ப்பணிப்புகள் பற்றிய கருத்துரைகளோடு தற்கால அரசியல் நிலைமைகள் தொடர் மிகவும் நேர்த்தியான உரையொன்றை தோழர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆற்றியிருந்தார்
நிகழ்வின் நிறைவில், தோழர் பத்மநாபாவின் நினைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 50 தோழர்களின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தோழர் பத்மநாபாவின் நினைவுகள் காலம் உள்ளவரை போற்றப்படும்








