அமரிக்க பேச்சுவார்த்தை குழு பாக்கிஸ்தான் பயணம்

அமரிக்க தூதுக்குழு மீண்டும் பேச்சுவார்த்தைக்காக பாக்கிஸ்தான் செல்கிறது என அமரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ( J.D.Vance) தலைமையிலான தூதுக்குழு திங்கள் கிழமை பாக்கிஸ்தான் சென்றடையும் எனவும் செவ்வாய்க்கிழமை ஈரானிய தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டாத பட்சத்தில் மீண்டும் ஈரான் மீது வான்வழி தாக்குதல் முன்னெடுக்கப்படும் என முன்னர் ஈரானை எச்சரித்திருந்தார் இதேவேளை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஈரானிய கடற்படை “புதிய கசப்பான தோல்விகளை” பரிசளிக்கும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானிய அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அவரது செய்தியில், ஈரானின் இறையாண்மையைப் பாதுகாக்க அந்நாட்டுப் படைகள் முழு தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

கடந்த சில மணி நேரங்களில் அந்த வழியாகச் சென்ற குறைந்தது இரண்டு வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சதித்திட்டங்கள் முறியடிக்கப்படும்

ஈரானின் கடல் எல்லைக்குள் அத்துமீறும் எந்தவொரு சக்திக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்படும் என்றும் கமேனி குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைக்கான அடிப்படை கட்டமைப்பு குறித்த இழுபறி நீடித்து வரும் சூழலில், உச்ச தலைவரின் இந்த ஆவேசமான பேச்சு போரை நோக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

Share this article

More News