கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை (CCPI) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இலங்கையின் ஒட்டுமொத்தப் பணவீக்கம், கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
ஒட்டுமொத்தப் பணவீக்கம் (Overall Inflation)
2026 மார்ச்: 2.2% 2026 பெப்ரவரி: 1.6% (பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் பணவீக்கம் உயர்வடைந்துள்ளது.)
உணவுப் பணவீக்கம் 2026 மார்ச்: 0.7%
2026 பிப்ரவரி: 0.2%
உணவு அல்லாத பணவீக்கம் 2026 மார்ச்: 2.9%
2026 பிப்ரவரி: 2.3%
கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் உணவு மற்றும் உணவு அல்லாத ஆகிய இரு துறைகளிலும் விலையேற்றம் காணப்படுவதால், ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 1.6% இலிருந்து 2.2% ஆக உயர்ந்துள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.







