ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் தமிழ் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு.

21.7.2026 நேற்று மதியம் இச்சந்திப்பு நடைபெற்றது. யாழ் ஜெட் விங் ஹோட்டலில் மதியம் 12 மணிக்கு ஆரம்பித்த இந்த சந்திப்பு இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, மற்றும் நெதர்லாந்து தூதர்களும், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதர் கார்மென் மொறேனா மற்றும் பேராளர்களின் பிரதி தலைவர் கலிஜா அகிசெவா உட்பட் டோரும், தமிழ் தரப்பில், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அதன் தலைவர் C. V. K. சிவஞானமும் ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி சார்பில் அதன் யாழ் மாவட்ட இணைப்பாளர் குழுத்தலைவரும் முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சருமான கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோருடன் யாழ் மாநகர முதல்வர் மற்றும்  ரெலோ, தமிழரசு மாநகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதில் C. V. K. சிவஞானம் செம்மணி அகழ்வுபொருட்களுக்குரிய காலம் கண்டுபிடிக்கப்பட வேண்டும், பிராஜா சக்தி திட்டம் மூலம் உள்ளூராட்சி செய்யற்பாடுகள் முடக்கப்படுவது மற்றும் தமிழர் ஆட்சியின் பங்காளிகளாக இல்லை எனவே உங்கள் ஆதரவு மகிழ்ச்சி அழிக்கிறது போன்ற கருத்துக்களை முன்வைத்தார்.

 

கலாநிதி சர்வேஸ்வரன் பத்து ஆண்டுகளாக மாகாணசபை தேர்தலை நடத்தாமல் ஆளுநரூடாக மத்திய அரசு தனது நிகழ்ச்சி நிரலை செய்யற்படுத்தி வருகிறது இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கையாகும்.

 

ஐ. நா. மனித உரிமை பேரவையின் இலங்கைக்கெதிரான தீர்மானங்களில் மாகாணசபை தேர்தல்கள் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்பதும் ஓர் அம்சமாகும் இதனை நிறைவேற்றுவதில் உங்களுக்கும் பங்குண்டு எனவே அதனை நடைமுறைப்படுத்துவதிலும் உங்கள் முயற்சி இருக்கவேண்டும்.

 

மாகானத்திற்கு ஒதுக்கப்பட்ட முழுமையான அதிகாரங்களும் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும், வடக்கில் 5:1 விகிதசராத்தில் மக்களும் படையினரும் உள்ளனர். காணிகளை ஆக்கிரமிப்பதும் புத்த கோவில்களை சட்டவிரோதமாக கட்டுவதுமே படையினரின் வேலையாகும். எனவே வடக்கு கிழக்கில் முப்படைகளும் 1983க்கு முந்திய நிலைக்கு படையினரை குறைக்கவேண்டும். பயங்கரவாத தடைசட்டமும் அதற்கு மாற்றாகமுன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலமும் அகற்றப்படவேண்டும்.

 

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் வரலாற்று பூர்வீகவாழ்விடம் என்பது முக்கிய அம்சமாகும். அதனை இல்லாமல் செய்து வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் நிகழ்ச்சி நிரலே யுத்தத்தின் பின் கடந்த 17 வருடங்களாக செய்யற்படுத்தப்பட்டு வருகிறது.

 

IMF மற்றும் ஏனைய கடன்கள் மூலம் எந்த ஒரு பொருளாதாரா திட்டங்களும் ஆரம்பிக்கப்படவில்லை மாறாக வடக்கு கிழக்கெங்கும் புத்த கோவில்கள் கட்டுவதே அரச முதலீடாக இருக்கிறது.

 

குச்சவெளி பிரதேச சபை பிரதேசத்தில் சிங்களவரே இல்லாத இடத்தில் 26 புத்த கோவில்களை அரசு எழுப்புகிறது. எனவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் வரலாற்று உண்மையையும் மதித்து வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த உங்கள் அலுவலகத்தை பயன்படுத்த வேண்டும்.

 

அரசியல் இஸ்திரதன்மை பொருளாதார அபிவிருத்திக்கு முன்னிபந்தனையாகும். எனவே இலங்கை பொருளாதார முன்னேற்றம் காண நிரந்தர தீர்வு முன்னிபந்தனையாகும் என்பதை அரசுக்கு நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் மன்னார் புதைகுழி எலும்புக்கூடுகள் மற்றும் செம்மணி ஆகியவை களஞ்சியத்தில் அடைத்து வைக்கப்படாமல் விரைந்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என பேராளர்களிடம் வலியுறித்தினார்.

 

மேலும் மாநகரசபை உறுப்பினர்கள் பல்வேறுவகை கழிவகற்றல் செய்யற்பாடுகளில் எதிர்நோக்கும் ஆள் பற்றாக்குறை, வாகன பற்றாக்குறை, தொழில்நுட்ப்ப மற்றும் உரிய இயந்திர வசதியின்மை பற்றி எடுத்துரைத்தனர்.

Share this article

More News