
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட தலைமைக்குழு உறுப்பினர்,
சாகித்ய அகாதமி விருதாளர், கவிஞர், நாடக இயக்குநர், மொழிபெயர்ப்பாளர், 130 நூல்களைப் படைத்தவர் தமிழக எல்லைப் போரில் சிறையேகியவர் எனப் பன்முக ஆளுமையாக விளங்கிய கவிஞர் புவியரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக காவல்துறை குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யப்பட்டது.
மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி, வட்டாட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் சட்ட மன்ற உறுப்பிர்கள், இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஏராளமானோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்,
புகழஞ்சலி நிகழ்வில் கவிஞர் சிற்பி, மூத்த வழக்கறிஞர் ராஜகோபால்(சென்னை) கவிஞர் பெ.சிதம்பரநாதன், தி.மணி(தமுஎகச) அஞ்சலியுரை வழங்கினர்.நிகழ்வை ப.பா.ரமணி ஒருங்கிணைத்தார்.
இஸ்கஃப் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் நிகழ்வில் பங்கேற்றார்.








