இயற்பியல் அறிவியல் (Physical Science) பாடத்தொகுதியில் கிளிநொச்சியை சேர்ந்த மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன் அகியலஇலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
தனது வெற்றியின் இரகசியம் என்னவென திருக்குமரன் குறிப்பிடும்போது ‘ஒவ்வொரு நாளும் விருப்பத்துடன் பாடங்களைக் கற்றுவந்தால் உயர்தரப் பரீட்சையில் வெற்றிபெறுவது இலகுவாகும்’ என ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நாம் நினைப்பது போன்று உயர்தரப்பரீட்சை அவ்வளவு கஷ்டமானது அல்ல. ஒவ்வொருநாளும் படிக்கும் பாடங்களை நாம் விரும்பிக் கற்றுக்கொண்டு ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் உயர்தரப்பரீட்சை இலகுவானதே. அதனால் நாம் நல்ல நிலையை அடையமுடியும்.
நான் அகிலஇலங்கைரீதியில் முதலாமிடம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இத்தனைகாலமாக ஆதரவும், ஊக்கமும் அளித்த அதிபர், ஆசிரியர், சகமாணவர்கள் மற்றும் எனது பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பெரிதாக பங்கேற்கவில்லை. ஆனால் விளையாட்டுப் போட்டிகளில் வலய மட்டம்வரை சென்றுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் 66.91%மாணவர்களும் கிழக்கு மாகாணத்தில் 66.32% மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதிக்கான தகமை பெற்றுள்ளார்கள்.







