கலகொட அத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றுவதற்கான சிறை அதிகாரிகளின் முடிவைச் செல்லாததாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் அமர்விலிருந்து, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய விலகிக்கொண்டுள்ளார்.
சிறை அதிகாரிகளின் முடிவைச் செல்லாததாக்க உத்தரவு கோரும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த முடிவு இன்று (14) அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த மனுக்களை விசாரிப்பதற்காக மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
சிறை தண்டனை
இதேவேளை, சிறை தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யக் கோரி மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பேரணி இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று (14) நிட்டம்புவ நகரத்தில் ஆரம்பமாகும் இந்த நடைபயணம் கடவத்தை நகரம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக உலபனே சுமலங்க தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நடை பேரணி கடந்த 10 ஆம் திகதி கண்டி தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமானது.
இந்நிலையில், நாளை (15) இந்நடப்பயணம் கொழும்பை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







