தமிழக முதல்வராக சனிக்கிழமை பதவியேற்கிறார் விஜய்

சென்னை: தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எட்டி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக ஆகிய கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு என்று அறிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதங்களுடன் விஜய் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய், இதன் மூலம் மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
த.வெ.க 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியிருந்தது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தது.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சியமைக்க தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளன.

தவெக 108 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 2 எம்.எல்.ஏக்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியின் பலம் 118 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.
ஏற்கெனவே இரண்டு முறை ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்த போது, ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் ஓப்புதல் கடிதங்களுடன் 118 உறுப்பினர்களின் பெயர் பட்டியலுடன் வருமாறு ஆளுனர் கேட்டிருந்தார்.தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேக்கரை இன்று மாலை மக்கள் மாளிகைக்கு சென்று ஆளுநரைச் சந்தித்த விஜய், அவரிடம் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனை அடுத்து சனிக்கிழமை காலை 11 மணிக்கு பதவி ஏற்பு வைபவம் இடம் பெறும் என செய்திகள் வெளியாகி உள்ளன.

Share this article

More News