தமிழ் தேசிய கூட்டணிக்கும்(DTNA ) இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ( ITAK) இடையே முக்கிய சந்திப்பு இன்று(27-10-2026) இடம் பெற்றது.

ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும்(DTNA ) இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ( ITAK) இடையிலான முக்கிய சந்திப்பும் கலந்துரையாடலும் இன்று மாலை ( 27.10.2026) ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களது வீட்டில் இடம் பெற்றது.
இக்கலந்தைரையாடலில், DTNA , ITAK இரண்டும் இணைந்து செயற்படுவது பற்றி பேசப்பட்டதை அடுத்து மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
1) பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான உத்தேச சட்டத்தை எதிர்த்தும், மாகாணசபை தேர்தல்களை நடாத்த கோரியும், இரண்டு கட்சிகளைம் வடகிழக்கில் கூட்டு தொடர் போராட்டங்களை நடாத்துவது.
2) மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக, உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு குழு, அரசியல் கட் சிகளின் கருத்தை அறியும் முகமாக அனைத்து அரசியல் கட்சிகளையும் தனித்தனியே அழைத்து கருத்தை கேட்டு வரும்  நிலையில், தமிழரசு கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளும், மகாணசபை தேர்தல்களை பழைய விகிதாசார பிரநித்துவ அடிப்படையில் உடன் நடாத்துவது அவசியம் என்றும், கலப்பு பொறிமுறை உருவாக்கும் வரை தேர்தல்களை பிற்போடுவது நியாயமானது அல்ல என உறுதியாக தெரிவிப்பது.
3) வடகிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில், வட்டார அபிவிருத்தி தொடர்பான திட்டமிடல், பணிகளில் இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது                     என மூன்று முக்கிய முடிவுகளில் இணக்கப்படாடு எய்தப்பட்டது.
மேற்படி கலந்துரையாடலில் தமிழரசு கட்சியின் தலைவர் சிவிகே சிவஞானம், செயலாளர் எம், ஏ . சுமந்திரன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சமத்துவ கட்சி தலைவர் மு.சந்திரகுமார், ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயளாளரும், பிளாட் அமைப்பின் தலைவர்களில் ஒருவருமான என்.
ரட்ணலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this article

More News