தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தில் பங்கேற்காத மீனவர்களுக்கு அபராதம்: பருத்தித்துறையில் சர்ச்சை

கட்டாயப்படுத்தி அரசியல் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வது ஜனநாயகத்திற்கு முரணானது என்றும், தற்போதைய பொருளாதாரச் சூழலில், அன்றாட வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மீனவர்கள் மீது இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது அநீதியானது என சங்கத்தினர் மீது பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் பருத்தித்துறை மீனவக் கிராமங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளதுடன், கட்டாய அரசியல் பங்கேற்பு குறித்த விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை நகர் மீனவர்கள் சங்க செயலாளரிடம் வினவிய போது, தமது சங்கத்தின் கடந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில் தமது சங்கத்திற்கு கூட்டங்களுக்கு வறுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டால் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத பட்சத்தில் அவர்களுக்கு 3000 தண்டப்பணம் அறவிடப்படும் என தீர்மானித்துள்ளதாக்கவும், அதன் அடிப்படையில் தான் இவ் தண்டம் அறவிடப்பட்டது என தெரிவித்துள்ளார்

Share this article

More News