
அமெரிக்க-தெஹ்ரான் ஒப்பந்தம் நிச்சயமற்று உள்ள நிலையில் தெற்கு ஈரானில் உள்ள பார்ஸ் எரிவாயு வயலில் மீண்டும் உற்பத்தி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் மூன்று கடல்சார் தளங்களில் ஈரான் எரிவாயு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலியத் தாக்குதல்களால் சில தரைவழி வசதிகளின் பதப்படுத்தும் திறன் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் குறித்த எரிவாயு வயல் காணப்பட்டது.
எனினும் இந்த தாக்குதலில் உற்பத்தி தளங்கள் சேதமடையவில்லை என்று அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு ஈரானில் உள்ள பந்தர் கங்கன் அருகே உள்ள 14 ஆம் கட்ட சுத்திகரிப்பு நிலையம் உட்பட, சேதமடைந்த வசதிகளில் பழுதுபார்க்கும் பணிகள் தொடரும் நிலையில், மூன்று தளங்களில் இருந்தும் உற்பத்தி அப்பகுதியில் உள்ள மற்ற சுத்திகரிப்பு ஆலைகளுக்கு திருப்பி விடப்படுவதாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.







