
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தலைநகர் டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய வளாகத்திற்குள் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு வேளையில், அங்கு வந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ராகுல் காந்தியை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச்; செல்லும் வீடியோவை வெளியிட்டு, ‘எல்லாம் நினைவில் கொள்ளப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ் தனது முந்தைய எக்ஸ் பதிவில், “மோதியும் ஷாவும் அகில இந்திய வானொலி நிலைய வளாகத்திற்கு போலீசாரை அனுப்பியுள்ளனர், அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்.பி.க்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றனர். போலீஸ் அடக்குமுறை மூலம் குரலை அடக்க மோதி விரும்புகிறார், ஆனால் நினைவில் கொள்ளுங்கள் – இந்த கர்ஜனை இப்போது அடக்கப்படாது, துரோகி ஞானேஷ் வெளியேறத்தான் வேண்டும்” என்று பதிவிட்டிருந்தது.
நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி
செவ்வாய்க்கிழமைஇ இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத் தலைமையகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மற்றும் பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
பேரணியை முன்னிட்டு நாடாளுமன்றம்இ சன்சத் மார்க், அகில இந்தியா வானொலி நிலையம் மற்றும் தேர்தல் ஆணையத் தலைமையகம் ஆகியவற்றைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, விரைவு அதிரடிப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்,ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு என்ன?
வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் நடப்பதாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்ஐஆர் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் மற்றும் படிவம்-6இல் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பான முடிவுகளில் விதிகள் பின்பற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
திங்கட்கிழமைஇ படிவம் 6 தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இதைத் தொடர்ந்துஇ தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படிவம் 6 இல் “சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்சமான” மாற்றங்களைச் செய்ததாக ராகுல் காந்தி கூறினார். இந்தக் குற்றச்சாட்டை பாஜக நிராகரித்துள்ளதுடன், படிவம் 6 சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
செவ்வாய்க்கிழமை, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத் தலைமையகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மற்றும் பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
பேரணியை முன்னிட்டு நாடாளுமன்றம்இ சன்சத் மார்க் அகில இந்தியா வானொலி நிலையம் மற்றும் தேர்தல் ஆணையத் தலைமையகம் ஆகியவற்றைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, விரைவு அதிரடிப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்இ ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி மற்றும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் என்ன கூறியது?
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் ‘படிவம்-6’ (Form-6) குறித்து, அக்டோபர் 5 திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான கருத்தைத் தெரிவித்தது.
படிவம்-6ல், விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோர் அல்லது தாத்தாஇ பாட்டி ஆகியோரின் பெயர்கள் முந்தைய வாக்காளர் பட்டியல்களில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்த தகவல்கள் கோரப்படுகின்றன.
படிவம்-6-ல் செய்யப்பட்ட மாற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறினார்.
திருத்தப்பட்ட படிவம்-6-ல் புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்பவர்களிடம் கடந்த ‘சிறப்புத் தீவிரத் திருத்த’ நடவடிக்கைக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரோ அல்லது தங்கள் பெற்றோரின் பெயரோ இடம்பெற்றுள்ளதா என்று கேட்கப்பட்டிருந்தது.
நீதிபதியின் இந்தக் கருத்து செப்டம்பர் 26 தேதியிட்ட பத்திரிகைக் குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த கூற்றிலிருந்து மாறுபட்டதாக உள்ளது.
செப்டம்பர் 26 அன்று வெளியிடப்பட்ட இந்தச் செய்திக் குறிப்பில்இ “எஸ்ஐஆர்-க்கான படிவம்-6-உடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழி மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
தேர்தல் ஆணையத்திற்குள் “முன்னெப்போதும் இல்லாத வகையிலான அரசியலமைப்புச் சார்ந்த விரிசல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்பாடுகள்” நிலவுவதாகக் குற்றம் சாட்டி வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தை வெளியிட்டது.
ஆவணங்கள் கிடைத்ததும், அப்படிவத்தில் மாற்றங்களைச் செய்தது யார் என்பதைப் பார்க்க விரும்புவதாகவும் நீதிமன்றம் கூறியது.







