மாகாணசபை முறைமை வருவதற்கு இந்தியாதான் காரணகர்த்தாவாக இருந்தது! இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவை

தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவைக்கும் இந்திய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு 04.08.2026 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிமுதல் 6.30 மணிவரையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ்பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்…

இச்சந்திப்பில் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாகவும்> காணிகள் விடுவிப்பபு மற்றும் புதிய அரசியல் சாசனம் தொடர்பாகவும் பேசப்பட்டது. மாகாணசபை தேர்தல் தொடர்பாக நேற்றையதினம் ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும்> ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவருடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாகவும் இந்தியத் தூதுவருக்கு விரிவாக எடுத்துக் கூறினோம்

இதில் எதிர்கட்சித் தலைவர் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கும்> மாகாணசபை தேர்தலை உடன் நடாத்துவதற்குமாக அவர் ஒத்துக்கொண்டிருக்கும் விடையங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் பட்டசத்தில் எந்தவிதமான காலதாமதமும் இல்லாமல் அதனை செய்யமுடியும் என்றும்> ஆனால் ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து நிற்பதானது காலத்தை விண்விரயமாக்கும் செயற்பாடு என்ற கோணத்தில்தான் அதனைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

ஆகவே அடுத்த வருடத்தில்கூட மாகாணசபைத் தேர்தல் நடைபெறுமா என்ற ஐயம் எங்கள் எல்லோர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார் என்பதனை இந்தியத் தூதுவருக்குத் தெரிவித்தோம்.

இலங்கையில் மாகாணசபை முறைமை வருவதற்கு இந்தியாதான் காரணகர்த்தாவாக இருந்து பெரும் பங்களிப்பை நல்கியுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகத்தான் இந்தத் தீர்வுமுறைமை கொண்டுவரப்பட்டது. இப்போது 25 வீதமான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வடகிழக்கு தமிழ் முஸ்லீம்> மலையக தமிழ்மக்கள் எல்லோரும் இணைந்து இந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். ஆகவே காத்திரமான வழியில் ஜனாதிபதி அவர்களுக்கு இந்திய அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசு மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற வகையில் வெளிஅழுத்தங்கள் தேவை என்ற நிலை உருவாகி வருகிறது. ஆகவே அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற விடையத்தை இந்தியத் தூதுவருக்கு மிகத் தெளிவாக கூறியிருக்கிறோம். காணிகள் விடுவிப்பு மற்றும் புதிய அரசியல் சாசனம் தொடர்பான பல விடையங்களையும் எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

அதனை அவர் செவிமடுத்தது மாத்திரமல்ல தாங்கள் ஆரம்பத்திலிருந்து தேர்தல் வைக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாகவும்> டெல்லியிலும்சரி கொழும்பிலுமசரி அவ்வப்போது தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறோம். நீங்கள் கூறிய விடையங்களை ஜனாதிபதிக்கு எடுத்துரைப்போம். நாளை வரவிருக்கின்ற இந்தியாவின் வெளியுறவுச் செயலாளருக்கும் இந்த விடையங்கள் சொல்லப்படும். அவரும் இந்தவிடையங்களை முதன்மைப்படுத்துவார் எனத் தெரிவித்தார்.

இச்சந்திப்பு மிகவும் சுமூகமான நல்ல சந்திப்பாக இருந்தது. இருதரப்பினரும் மனம்திறந்து பேசக்கூடியதாக இருந்தது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Share this article

More News