யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க மற்றும் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் ஊடகவியலாளர்களின் சில கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக செய்தி தெரிவிக்கிறது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆரம்பத்தில் சுமார் 20 நிமிடங்கள் சிங்கள மொழியில் கருத்து தெரிவித்த பின்னர், அதன் தமிழ் மொழிபெயர்ப்பை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் வழங்கினார். பின்னர் சில கேள்விகளுக்கு பதிலளித்த இரு அமைச்சர்களும் தங்களுக்கு வேறு பணி இருப்பதாகக் கூறி வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது







