வடமாகாண ஆளுனரின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

சாவகச்சேரி நகரபை உதவி தவிசாளர் ஞா.கிஷோர் அவர்களின் பதவியைப் பறித்த. வடமாகாண ஆளுனரின் ஜனநாயக விரோதச் செயலை கண்டித்து சாவகச்சேரியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

26.06.2026 வெள்ளிக்கிழமை (இன்று) காலை 9.30 மணியளவில் சாவகச்சேரி பஸ்நிலைய முன்றலில் சாவகச்சேரி வர்த்தகர் களால் இக்கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

வடமாகாண ஆளுனருக்கு எதிரான இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உரையாற்றினர். கண்டன கோசங்களும் எழுப்பப்பட்டன.

Share this article

More News