53 வருடங்களுக்கு பின்னர் நிலவைநோக்கிய மனித பயணம் மீண்டும் ஆரம்பம்

அமரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின்இ ஏவுதளத்தில் இருந்து ஆர்டெமிஸ் II  (Artemis II) விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 10 நாட்களில் . நிலவை ஒரு முறை சுற்றிவிட்டு திரும்பும் வகையில் இப்பயணம் திட்டமிடப் பட்டுள்ளது. பலதடவை தொழில் நுட்ப காரணங்களால் பிற்போடப் பட்டுவந்த இப்பயணம் வெற்றி அளிக்கும் பட்சத்தில் நாசா விஞ்ஞானிகளின் நவீன தொழில் நுட்ப ஆளுமையை உலகிற்கு பறைசாற்றும்

இதே ஏவுதளத்தில் இருந்து தான் ஒருகாலத்தில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவை  நோக்கிய தனது வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

இது  53 ஆண்டுகளுக்கு பின்னர, மனிதர்கள் தாழ் விண்வெளி பாதையைத் தாண்டிச் செல்லும் முதல் பயணமாக அமைகிறது
. பூமிக்குப் மிக அருகிலுள்ள அண்டை உலகத்துக்குத் திரும்பும் முயற்சிக்கு இது புதிய தொடக்கமாக இருக்கும்.

2026 மார்ச் 31 வரைஇ சுமார் 650 மனிதர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர். அவர்களில் 24 பேர் மட்டுமே சந்திரப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அந்த 24 பேரில் 12 பேர் சந்திரனில் தரையிறங்கி கால் பதித்தவர்கள்; மற்ற 12 பேர் சந்திரனைச் சுற்றி வந்தவர்கள். மீதமுள்ள பெரும்பாலானவர்கள் பூமிக்கு அருகே தாழ் விண்வெளிப்பாதையில் தான் பயணம் செய்துள்ளனர்.

சுமார் நூறு முதல் இரண்டாயிரம் கிமீ உயரம் வரை பூமியை சுற்றியுள்ள பகுதி தான் தாழ் விண்வெளி பகுதி. 1972 டிசம்பரில் அபோல்லோ 17 நிலவிலிருந்து திரும்பிய பிறகு மனிதர்கள் யாரும் தாழ் விண்வெளியை தாண்டிச் செல்லவில்லை. ஆர்டெமிஸ் ஐஐ கடந்த ஐம்பது ஆண்டுகளில் முதன் முறையாக மனிதர்களை ஏந்தி அந்த எல்லையைக் கடந்து செல்லும்.

இந்தப் பயணத்தின் இன்னொரு சிறப்பு,அது பல்வேற பின்னணியுள்ள விண்வெளி வீரர்களை உள்ளடக்கிய குழுவை கொண்டுள்ளது ஆகும். இதில் சந்திரப் பயணத்துக்குச் செல்லும் முதல் கருப்பின விண்வெளி வீரர், முதல் பெண் விண்வெளி வீரர், மேலும் ஆழ்விண்வெளிக்குச் செல்லும் முதல் கனடியர் ஆகியோர் உள்ளனர்.

நிலவில் தரையிறங்காது
ஆனால் ஒரு விஷயம் தெளிவு, இந்தப் பயணம் சந்திரனில் தரையிறங்குவதற்கல்ல. சந்திரனைச் சுற்றி பலமுறை வலம் வரவும் இல்லை. இது சந்திரனின் மறுபுறம் சென்றுஇ மீண்டும் பூமிக்குத் திரும்பும் பத்து நாள் “ஆற்றல் தேவைப்படா திரும்பிச் செல்லும்;” (free- return) பயணம்.

இதன் பொருள், விண்கலம் சந்திரனருகே சென்றாலும் தரையிறங்காது.அதைச் சுற்றி வளைந்து திரும்பும்.

” ஆற்றல் தேவைப்படா திரும்பிச் செல்லல் ” என்றால்,சந்திரனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலத்தின் பாதையை மாற்றி.
பூமியை நோக்கி செலுத்துவது. அதாவது பூமியிலிருந்து நிலவுக்குச் செல்ல விண்கலம் ஆற்றலைச் செலவிடும்; ஆனால் திரும்பிச் செல்லும் பயணத்தில் ஆற்றல் தேவையில்லை. பெருமளவு எரிபொருள் செலவிட வேண்டியதில்லை. கயிற்றில் கட்டிய பந்தை சுழற்றிவிட்டு கையை விடும்போது அது புதிய திசையில் பாய்வது போல, சந்திரனின் ஈர்ப்பு விசை விண்கலத்தைப் பிடித்து சுழற்றி பூமி நோக்கித் திருப்பி வீசும்.

10 நாட்கள் பயணத்தின் பின் விண்கலம் கலிபோர்னியா அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் இறங்கும். மீட்பு குழுக்கள் விண்வெளி வீரர்களையும் விண்கலத்தையும் மீட்டெடுப்பார்கள்.
நிலவுடன் மனிதனின் இரண்டாம் தேன்நிலவின் தொடக்கமே இந்தப் பயணம்.

Share this article

More News