இலங்கை – இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை _ இந்திய துணை ஜனாதிபதி…

இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதாக இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும், வடக்கு – கிழக்கின் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (19) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த இந்திய துணை ஜனாதிபதி, இலங்கை – இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் புதுடில்லியின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை.

சந்திப்பில் கலந்துகொண்டோர்

மாகாண சபைகளுக்கான தேர்தல் தாமதப்படுத்தப்படும் நிலையில் தேர்தலை விரைந்து நடத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமாரவுடனான சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.

அச்சமயத்தில் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தினார்.” என தெரிவித்தார்

Share this article

More News