செம்மணி புதைகுழி: மூன்றாம் நாள் அகழ்வில் என்புக்கூட்டுத் தொகுதி அடையாளம்

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சட்டத்தரணி ஞா. ரனீத்தா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அதனை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் மூன்றாம் நாள் பணிகள் நேற்றைய தினம் (29-04-2026) நடைபெற்றது.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இன்றைய அகழ்வு பணிகளின் போது ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட இரு என்பு கூட்டு தொகுதிகளின் பகுதியளவான என்பு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அகழ்வு பணிகளின் போது சில என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றினை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவற்றை சுத்தம் செய்த பின்னரே எத்தனை என்பு கூடு என்பதனை உறுதியாக கூற முடியும்.

அகழ்வு பணிகள் 1.5 அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த ஆழத்தில் அகழ்வு பணிகள் மேற்கொண்ட என்பு கூடுகள் மீட்கப்பட்டன.

இன்றைய அகழ்வு பணிகளின் போது ஓர் இடத்தில் சந்தேகத்திற்கு உரிய முறையில் கரியநிற மண் காணப்பட்டது.

அதனால், அதனை அரித்தட்டு மூலம் அரித்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறிய வலை போன்ற பொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Share this article

More News