ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீடம் சந்திப்பும் எடுக்கப்பட்ட தீர்மானங்களும்

அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம், வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையரின் இலங்கை தொடர்பான கருத்துக்கள் அதனைச் சமாளிக்கும் வiயிலான இலங்கை அரசாங்கத்தின் கபடத்தனமான செயற்பாடுகள் ஆகியவை தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீடம் கடந்த சனிக்கிழமை அன்று மாலை கூடி விரிவாக ஆராய்ந்தது.

கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாண கல்வி அமைச்சரும் கட்சியின் துணை செயலாளருமான கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், கட்சியின் துணைத்தலைவரும் கிழக்குமாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம், முன்னாள் மன்னார் நகரசபை உறுப்பினரும் கட்சியின் பொருளாளருமான ரட்ணசிங்கம் குமரேஸ், மத்திய குழு உறுப்பினர் அருந்தவராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன என அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்கம் முன்வைத்த 20ஆவது திருத்தத்தையும் அந்தத் திருத்தத்திற்காகக் கொடுக்கப்பட்ட திருத்தங்களைம் ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் இச்சட்டமூலம் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுவதாகச் சுட்டிக்காட்டி பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்புடனும்தான் இதனைச் சட்டமாக்க முடியும் என்று கூறியிருக்கிறது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே 20ஆவது திருத்தத்தை பல்வேறு காரணங்களுக்காக நிராகரித்து வந்தது. அதனை அரசியல் உயர்பீடம் ஏற்றுக்கொள்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு தேர்தல் விஞ்ஞாபனங்களின் மூலம் முன்வைக்கப்பட்ட வடக்கு-கிழக் இணைப்பு, சமஷ்டி அரசியலமைப்புமுறை, மதச்சார்பற்ற நாடு, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பன நிராகரிக்கப்பட்டு ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பான அறிக்கையாகவே வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதால் அறிக்கை வெளிவந்ததும் மீண்டும் அரசியல்பீடம் கூடி இந்த அறிக்கை தொடர்பில் விவாதித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அவமதித்து ஐ.நாவின் விருப்பத்திற்கேற்ப தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று அமைச்சர்கள் கூறுவதை ஈபிஆர்எல்எவ் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஐ.நா. மனிதவுரிமை ஆணையகத்தில் இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டவாறு இரண்டு வருடகால அவகாசம் கொடுத்து இலங்கை அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டிலிருந்து பிணை எடுத்த பெருமை தமிழரசுக் கட்சியையே சேரும். இத்தகைய சூழலில் தமிழரசுக் கட்சி தான் விட்ட தவறுகளைத் திருத்திக்கொண்டு இலங்கை அரசாங்கத்தி; கையாலாகாத்தனத்தை சர்வதேச சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முன்வரவேண்டும் என்று சுட்டிக்காட்டுவதுடன், அதற்கான சகல நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சி தலைவர் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்து பேசி ஒருமித்த முடிவுகள் எடுக்காமல் தமிழரசுக் கட்சியினர்இ கூட்டமைப்பு சார்பாக அறிக்கைகள் சமர்ப்பிப்பதையும் பின்னிணைப்புகள் வழங்குவதையும் ஈபிஆர்எல்எவ் கண்டிக்கிறது. இத்தகைய செயற்பாடுகள் கூட்டமைப்பின் ஜனநாயக தன்மையையும் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான ஐக்கியத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் இல்லாமற் செய்வதற்கே வழிவகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

Share this article

More News